மகிளிப்பட்டியில் குறைவான விலைக்கு காய்கறி விற்பதற்கு எதிர்ப்பு

கரூர், செப். 19: கரூர் மாவட்டம் மகிளிப்பட்டியை சேர்ந்த விவசாயி ஒருவர், தனது நிலத்தில் விளையும் கத்திரி, வெண்டை, முருங்கை மற்றும் பாகற்காய் ஆகியவற்றை தினமும் இரண்டு சக்கர வாகனத்தில் கொண்டு வந்து காந்திகிராமத்தில் உள்ள உழவர் சந்தையில் வைத்து விற்பனை செய்து வருகிறார். உழவர் சந்தையில் இவருக்கு என ஒரு கடை ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இவர் சந்தைப் பகுதியில் காய்கறிகளை மிகவும் குறைந்த விலைக்கு விற்பனை செய்வதாக கூறி சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த விவசாயி, நேற்று உழவர் சந்தைக்கு முன்பாக வந்து, காய்கறிகளை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டதோடு, அதிகாரிகளிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இதன் காரணமாக சந்தையின் முன்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. உழவர் சந்தையில் தினமும் விவசாயிகளுக்கு கடைகள் ஒதுக்க குலுக்கல் நடைபெறும். இதே போல்தான் இந்த விவசாயிக்கும் கடை ஒதுக்கப்பட்டது. ஆனால், அந்த விவசாயி ஒதுக்கப்பட்ட இடத்தில் விற்பனை செய்யாமல் வேறு பகுதியில் விற்பனை செய்வதால் மற்ற விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாகத்தான் இந்த பிரச்னை ஏற்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்