மகாலட்சுமி பில்டர்ஸ், வசந்தம் புரமோட்டர்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 10 இடங்களில் வருமான வரித்துறை சோதனை: முக்கிய ஆவணங்கள் கைப்பற்றியதாக தகவல்

சென்னை: வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரை தொடர்ந்து சென்னையை தலைமையிடமாக இயங்கி வரும் மகாலட்சுமி பில்டர்ஸ் மற்றும் வசந்தம் புரமோட்டர்ஸ் அகிய இரண்டு நிறுவனங்களுக்கு சொந்தமான 10 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை அண்ணாநகர் கிண்டிகேட் காலனி 9வது தெருவில் மகாலட்சுமி பில்டர்ஸ் என்ற பெயரில் கட்டுமான நிறுவனம் இயங்கி வருகிறது. அதேபோல் அரும்பாக்கம் பாபு ஜெகநாதன் தெருவில் வசந்தம் புரமோட்டர்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த இரண்டு நிறுவனங்களும் மத்திய அரசுக்கு வரி ஏய்ப்பு செய்ததாக புகார்கள் எழுந்தது. அதைதொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று காலை முதல் நள்ளிரவு வரை அண்ணாநகரில் இயங்கி வரும் மகாலட்சமி பில்டர்ஸ் தலைமை அலுவலகம், அரும்பாக்கத்தில் உள்ள வசந்தம் புரமோட்டர்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகம், செங்குன்றம்  உட்பட சென்னையில் இந்த இரண்டு நிறுவனங்களுக்கு சொந்தமான 10 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அண்ணாநகர் அலுவலகத்தில் 6 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அரும்பாக்கத்தில் உள்ள வசந்தம் புரமோட்டர்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் 8 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 2 நிறுவனத்திற்கு சொந்தமான 10 இடங்களில் இருந்து  பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததற்காக முக்கிய ஆவணங்கள் வரி ஏய்ப்பு செய்து பல்வேறு இடங்களில் முதலீடு செயத்தற்கான ஆவணங்கள், நிறுவனங்களில் கிடைத்த லாபத்தை மறைத்ததற்கான ஆவணங்கள் பல சிக்கியதாக வருமான வரித்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் குறித்து முழுமையாக கணக்காய்வு செய்த பிறகு தான் இந்த இரண்டு நிறுவனங்களும் எவ்வளவு கோடி வரி ஏய்ப்பு செய்தது தெரியவரும் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளது….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்