மகாராஷ்டிரா மாநிலத்தில் வன்முறையில் ஈடுபட்ட 50 பேர் கைது: அமராவதியில் இணைய சேவை முடக்கம்

நாக்பூர்: மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த வன்முறை சம்பவத்திற்கு காரணமான 50 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அமராவதியில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. திரிபுராவில் கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட வன்முறையை கண்டிக்கும் வகையில், மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் குறிப்பிட்ட மத அமைப்புகள் மாலேகானில் பேரணி நடத்தியது. அப்போது சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதற்கு எதிராக உள்ளூர் பாஜக சார்பில் கடையடைப்பு அறிவிக்கப்பட்டது. ராஜ்கமல் சவுக் பகுதியில் கடைகள் மீது கற்கள் வீசப்பட்டதால் வன்முறை ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்து அரங்கேறிய வன்முறையை அடுத்து அமராவதியில் 4 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான உத்தரவை கூடுதல் போலீஸ் கமிஷனர் சந்தீப் பாட்டீல் பிறப்பித்தார். பொதுமக்கள் மருத்துவ தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என போலீசார் கூறியுள்ளனர். இதேபோல 5 பேருக்கு மேல் கூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர வன்முறை பரவாமல் இருக்க அமராவதியில் இணைய சேவை முடக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘கற்களை வீசி தாக்குதல் நடத்தியது, பொருட்களை கொள்ளையடித்தது, கடைகளுக்கு தீ வைத்தது தொடர்பாக இருதரப்பையும் சேர்ந்த சுமார் 50 பேர் கைது செய்யப்பட்டனர். ஜல்னா, வார்தா, நாக்பூர், புல்தானா பகுதியில் மாநில ரிசர்வ் போலீஸ் படைப்பிரிவுகள் மற்றும் கூடுதல் போலீஸ் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன’ என்றார்….

Related posts

கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 344 ஆக உயர்வு

தூத்துக்குடி அதிகாரிகள் சொத்து விவரங்கள் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு இடைக்கால தடை: உச்ச நீதிமன்றம் அதிரடி

சக்கரவியூக பேச்சு பிடிக்காததால் எனக்கு எதிராக ஈடி ரெய்டு நடத்த திட்டம்: டீ, பிஸ்கட்டுடன் காத்திருப்பதாக ராகுல் டிவிட்