மகளிர் தினத்தையொட்டி மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் டிஐஜி, எஸ்பி தலைமையில் மரக்கன்று நட்டனர்-350 பெண் காவலர்கள் பங்கேற்பு

தஞ்சை : மகளிர் தினத்தை ஒட்டி தஞ்சாவூர் டி.ஐ.ஜி., கயல்விழி, எஸ்.பி., ரவளிப்பிரியா ஆகியோர் தலைமையில் 350 பெண் காவலர்கள் மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் பயன் தரக்கூடிய மா, பலா, செம்மரம், புங்கன் உள்பட பல்வேறு வகையான மரக்கன்றுகளை நட்டனர்.பெண்களை போற்றும் விதமாகவும், பெண்களின் பிரதிநிதித்துவத்தை உணர்த்தும் விதமாகவும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. தஞ்சை மாவட்ட காவல் அலுவலகத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் டி.ஐ.ஜி., கயல்விழி, எஸ்.பி., ரவளிப்பிரியா ஆகியோர் தலைமையில் 350 பெண் போலீசார் மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் பயன் தரக்கூடிய மா, பலா, செம்மரம், புங்கன் உள்பட பல்வேறு வகையான மரக்கன்றுகளை நட்டனர்.மேலும் தஞ்சாவூர் ஆயுதப்படை காவல் பிரிவில் பணியாற்றும் பெண் காவலர்கள் 12 பேருக்கு ஓட்டுநர் பயிற்சி வழங்கப்பட்டது. தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேற்று நடந்த மகளிர் தினத்தையொட்டி தஞ்சாவூர் மாவட்டக் காவல் அலுவலகத்தில் தஞ்சாவூர் சரக டிஐஜி., கயல்விழி ஓட்டுநர் உரிமம் வழங்கினார்.தஞ்சாவூர் மாவட்டத்தில் பெண் காவலர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தடைகளை தகர்ப்போம் என்பதை வலியுறுத்தும் விதமாக டி.ஐ.ஜி., கயல்விழி, எஸ்.பி., ரவளிப்பிரியா உட்பட பெண் போலீசார் கண்ணாடி இழை பலகையில் தங்களின் கையை வர்ணத்தில் நனைத்து பதிய செய்தனர். இந்த கண்ணாடி பலகை எஸ்.பி. அலுவலகத்தில் மாட்டப்பட உள்ளது.மேலும் விழாவில் சிறப்பாக பணியாற்றியமைக்காக ஓவர் ஆல் டிராபி கோப்பையை மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திராவுக்கும், புலன் விசாரணை நிலுவையில் இருந்த வழக்குகளை விரைந்து முடித்தமைக்காக சிறப்பு விருதை தஞ்சை கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரனுக்கும், கோர்ட் நடவடிக்கைகளில் விரைவாகவும், சிறப்பாகவும் செயல்பட்ட சுவாமிமலை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அன்பு நடராஜன், மருத்துவமனையில் காய சான்றிதழ், பிரேத பரிசோதனை சான்றிதழ்களை அதிகளவில் பெற்று சிறப்பாக பணியாற்றிய ஒரத்தநாடு முதல்நிலை காவலர் மணிமேகலைக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.இதேபோல் குற்றவழக்குகளை விரைவாக கண்டறிந்த தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார் மற்றும் குழுவினர், சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் குழுவினருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது….

Related posts

நாகப்பபடையாட்சியாரின் தியாக வரலாறு பள்ளி பாடப்புத்தகத்தில் இடம் பெற்றிட நடவடிக்கை: தமிழக அரசுக்கு பொன்குமார் வலியுறுத்தல்

சென்னை அடுத்த ஆவடி, திருநின்றவூர், பட்டாபிராம் உள்ளிட்ட இடங்களில் கனமழை!

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்புடைய 12 இடங்களில் நடந்த சிபிசிஐடி சோதனை நிறைவு