மகளிர் சுய உதவிக்குழு தலைவி ரூ.34 லட்சம் கடன் வாங்கி மோசடி: உறுப்பினர்கள் புகார் மனு

 

விருதுநகர், ஜூலை 23: மகளிர் சுயஉதவிக்குழு தலைவி ரூ.34 லட்சம் கடன் வாங்கி மோசடி செய்ததாக உறுப்பினர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் ஆமத்தூர் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் நேற்று மனு அளித்தனர். மனுவில், ஆமத்தூரில் மகளிர்குழு தலைவியிடம் மாதம் தோறும் தவணை, வட்டியுடன் செலுத்தி வந்தோம். குழுவின் வரவு செலவு உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் குழு தலைவி மற்றும் அவரது குடும்பத்தினர் பராமரித்து வந்தனர்.

கடந்த ஜூன் மாத தவணை செலுத்துவதற்கு கடன் கொடுத்த நிறுவனங்கள் தேடிவந்தன. அப்போது குழு தலைவி திடீரென மாயமாகிவிட்டார். மேலும் ஒவ்வொரு உறுப்பினர் பெயரில் உள்ள கடன் தொகையை நிறுவனங்கள் தெரிவித்த போது தான் அனைவரின் பெயரில் உள்ள கடன் தொகை தெரியவந்தது.

குழு உறுப்பினர்கள் பெயரில் கூடுதலாக ரூ.34 லட்சம் கடன் அதிகம் பெற்று மோசடி செய்துள்ளார். இது குறித்து தலைமறைவான குழு தலைவி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் கேட்ட போது அவதூறாக திட்டி வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து கடன் தொகையை மீட்டெடுத்து காப்பாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி