மகளிர் சுகாதார வளாகத்தை ஆக்கிரமித்த முட்புதர்கள் அகற்றம்

திருவாடானை, ஜூன் 22: திருவாடானை அருகே ஓரிக்கோட்டை பகுதியில் கடந்த 2015-16ம் ஆண்டு ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கிராம சேவை மைய கட்டிடம், மகளிர் சுகாதார வளாகம் ஆகியவை கட்டப்பட்டது. ஓரிக்கோட்டை ஊராட்சி நிர்வாகம் சார்பில் இந்த கிராம சேவை மையக் கட்டிடத்தில் நடைபெறும் பல்வேறு கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வரும் பெண்கள் இந்த சுகாதார வளாகத்தை பயன்படுத்தி வந்தனர். மேலும் இப்பகுதியைச் சேர்ந்த பெண்களும் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக இந்த கிராம சேவை மைய கட்டிடத்தின் அருகில் உள்ள மகளிர் சுகாதார வளாகப் பகுதியானது பயன்பாடின்றி முட்செடிகள் வளர்ந்து புதர்மண்டியது.

இதனால் இரவு நேரங்களில் இந்த கட்டிடமானது மதுப்பிரியர்கள் மற்றும் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியது. இந்த நிலையில், முட்புதர்களை அகற்றி மகளிர் சுகாதார வளாகத்தை மீண்டும் பெண்கள் பயன்படுத்தும் வகையில் தூய்மைப் படுத்த வேண்டும் என இந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து தினகரன் நாளிதழில் கடந்த ஜன.19ம் தேதியன்று படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து மகளிர் சுகாதார வளாகப் பகுதியை ஆக்கிரமித்திருந்த முட்புதர்கள் அகற்றப்பட்டுள்ளது.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு