மகளிர் உலக கோப்பை; நியூசிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா ஹாட்ரிக் வெற்றி

வெலிங்டன்: நியூசிலாந்தில் நடந்து வரும் 12வது ஐசிசி மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் வெலிங்டனில் இன்றுநடந்த 11வதுலீக் போட்டியில் நியூசிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 269 ரன் எடுத்தது. அதிகபட்சமாக எல்லிஸ் பெர்ரி 68 ரன் எடுத்தார். ஆஷ்லே கார்ட்னர் 18 பந்தில் 4 பவுண்டரி, 4 சிக்சருடன் நாட்அவுட்டாக 48 ரன் விளாசினார்.பின்னர்  களம் இறங்கிய நியூசிலாந்து அணி 30.2 ஓவரில் 128 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால்  ஆஸ்திரேலியா 141 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ள ஆஸி.பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியது. நியூசிலாந்து 4வது போட்டியில் 2வது தோல்வியை சந்தித்தது….

Related posts

இந்திய அணி விளையாடிய விதம் உண்மையிலேயே இந்த வெற்றிக்கு தகுதியானவர்கள்தான்: ஜாஸ் பட்லர்!

டி20 உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இறுதி போட்டிக்குள் நுழைந்தது இந்திய அணி

யுரோ கோப்பை கால்பந்து நாக் அவுட் சுற்று நாளை ஆரம்பம்: நாக் அவுட் சுற்று ஆட்டங்கள்