மகளிர் உரிமை தொகை திட்டத்தை தொடங்கி வைக்க வருகை தரும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: சுந்தர் எம்எல்ஏ தகவல்

 

காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் சார்பில், மகளிர் உரிமை தொகை திட்டத்தை தொடங்கி வைக்க வருகைதரும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ தலைமையில் 10 ஆயிரம் பெண்கள், 5 ஆயிரம் இளைஞர்கள், திமுக நிர்வாகிகளுடன் 50 ஆயிரம் பேர் உற்சாக வரவேற்பு அளிக்கப்படவுள்ளது என மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் 2,500 ஆண்டுகால வரலாறு கொண்ட தொண்டை மண்டலத்தின் தலைநகரமாக விளங்கும் சங்ககால இலக்கிய சான்றுகள் நிறைந்த தொன்மை நகரம். உலகே வியக்கும் உன்னத பட்டுகளை தயாரித்து கொடுக்கும் நெசவு நகரம். ஆயிரம் கோயில்களின் அழகிய நகரம். கலைகள் மிகுந்த அறிவு தலைநகரம்.

இத்தனை வரலாற்று பெருமை வாய்ந்த காஞ்சிபுரம் மண்ணில் பிறந்து தனது அடுக்கு மொழி பேச்சாற்றலாலும், எழுத்தாற்றலாலும், அறிவாற்றலாலும் தமிழக மக்களை கவர்ந்த மாபெரும் அரசியல் தலைவர், காஞ்சி தந்த காவியத்தலைவன், உலகம் போற்றும் உத்தம தலைவர் அண்ணா பிறந்த மண் காஞ்சிபுரம். இத்தனை பெருமைகளை கொண்டு திமுகவின் தலைநகராக விளங்கும் காஞ்சிபுரத்தில் மேலும் ஒரு வரலாற்றுச் சாதனையை திராவிடம் மாடல் அரசின் மக்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் 1 கோடி மகளிருக்கு ரூ.1000 உரிமை தொகை வழங்க உள்ளார். இன்று காலை 10 மணிக்கு காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட நிகழ்ச்சிக்கு வருகை தரும் கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமையில் 10 ஆயிரம் பெண்கள் மலர் தூவியும், 5 ஆயிரம் இளைஞர்கள் ஒரே மாதிரியான டி-ஷர்ட் அணிந்து கைத்தட்டி ஆரவாரத்துடன், திமுக நிர்வாகிகள் 50 ஆயிரம் பேர் உற்சாகமாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.

இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன், காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாநில இளைஞரணி துணை செயலாளர் அப்துல் மாலிக், மாவட்ட அவைத்தலைவர் இனிய அரசு, மாவட்டத் துணை செயலாளர்கள் கோகுலக்கண்ணன், மலர்விழி குமார், மாவட்ட பொருளாளர் ஆறுமுகம், செயற்குழு உறுப்பினர்கள் நாகன், நாராயணன், சுகுமார், பொதுக்குழு உறுப்பினர்கள் வெளிக்காடு ஏழுமலை, சசிகுமார், ராஜேந்திரன், மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன், நகர செயலாளர் குமார், ஒன்றிய செயலாளர்கள் குமார், ஞானசேகரன், சாலவாக்கம் குமார், சேகர், குமணன், கண்ணன், தம்பு, சத்திய சாய், பென். சிவக்குமார், ராமச்சந்திரன், ஏழுமலை, சரவணன், சிற்றரசு, பாபு, முன்னாள் எம்எல்ஏ அரசு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் யுவராஜ், மாணவரணி அமைப்பாளர் டைகர் குணா, பேரூர் செயலாளர்கள் பாரிவள்ளல், பாண்டியன், சுந்தரமூர்த்தி, எழிலரசன், செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் ராஜா ராமகிருஷ்ணன்,

ஜெயலட்சுமி மகேந்திரன், மாலதி செல்வராஜ், தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் ஜியாவுதீன், மீனவர் அணி அமைப்பாளர் பாரத், நகர மன்ற துணைத் தலைவர் சிவலிங்கம், இடைக்கலை நாடு பேரூராட்சி தலைவர் சம்யுக்தா அய்யனார், அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி தலைவர் நந்தினி கரிகாலன், கருங்குழி பேரூராட்சி தலைவர் தசரதன், உள்ளிட்ட ஒன்றிய மாநகர நகர பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை