மகளிர் உரிமை தொகைபெற வசதியாக கிராமங்களில் கூடுதல் அஞ்சலகங்கள் திறப்பு

திருப்புவனம், அக்.14: தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற பின் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.ஆயிரம் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பயனாளிகளுக்கு வங்கிகள், அஞ்சலக சேமிப்பு கணக்கு மூலம் பணம் வழங்கப்பட்டு வருகிறது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் வங்கி கணக்கில் குறைந்த பட்சம் ஆயிரம் ரூபாய் முதல் இரண்டாயிரம் ரூபாய் வரை இருப்பு வைக்கப்பட வேண்டும்.

ஆனால் அஞ்சலகங்களில் குறைந்தபட்ச இருப்பு தொகை 200 ரூபாய் வரை வைக்கலாம் என்பதால் பலரும் அஞ்சலகங்களில் சேமிப்பு கணக்கு தொடங்கி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் இரண்டு தலைமை அஞ்சலகங்கள், 40 துணை அஞ்சலகங்கள், 185 கிராம அஞ்சலகங்களில் உள்ளன. பின்தங்கிய கிராமப்புறங்களில் போதிய அஞ்சலகங்கள் இல்லை என்பதால் கிராமப்புற பெண்கள் சிரமத்திற்குள்ளாகினர்.

தற்போது மாவட்டத்தில் கூடுதல் அஞ்சலகங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. திருப்புவனம் அருகே செங்குளம் கிராமத்தில் நேற்று புதிய அஞ்சலக திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு முக்குடி ஊராட்சி மன்ற தலைவர் முத்தையா தலைமை வகித்தார். புதிய அஞ்சலகத்தை மாவட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் மாரியப்பன் திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார்.

செங்குளம் கிராமப்புற அஞ்சலகம் மூலம் செங்குளம்,பறையன்குளம், முக்குடி உள்ளிட்ட ஆறு கிராமமக்கள் பயன்பெறுவார்கள். கிராமப்புற பெண்கள் பலரும் அஞ்சலகங்களில் சேமிப்பு கணக்கு தொடங்குவதால் அஞ்சலகங்களின் வருவாயும் அதிகரித்துள்ளது. செங்குளத்தில் அஞ்சலகம் திறக்க்கப்படுவதை ஒட்டி ஏராளமான பெண்கள் விழாவில் பங்கேற்றனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை