மகளிர் உரிமைத்தொகை கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் குவிந்த பெண்கள்

நாகர்கோவில், டிச.13: மகளிர் உரிமை தொகை கேட்டு மனு அளிக்க நேற்று ஏராளமான பெண்கள் கலெக்டர் அலுவலகம் வந்தனர். மார்க்சிஸ்ட் கட்சி ராஜாக்கமங்கலம் ஒன்றியக்குழு உறுப்பினர் மிக்கேல் நாயகி தலைமையில் ஏராளமான பொதுமக்கள் நேற்று நாகர்கோவிலில் உள்ள குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திரண்டனர். பின்னர் அவர்கள் கலெக்டர் ஸ்ரீதரை சந்தித்து மனு ஒன்று அளித்தனர். அந்த மனுவில், ‘தமிழக அரசு மகளிர் உரிமை தொகை ரூ.1000-ஐ பெற இரண்டாவது முறையாக விண்ணப்பித்தவர்களுக்கு இதுவரை உரிமை தொகை கிடைக்கவில்லை. உரிமை தொகை பெற அனைத்து தகுதிகள் இருந்தும் மறுக்கப்படுவது வேதனை அளிக்கிறது. எனவே தகுதி வாய்ந்தவர்களுக்கு உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அதில் கூறப்பட்டிருந்தது.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை