போலீஸ் நன்னடத்தை சான்று விவகாரம் பாஸ்போர்ட் பெற அஞ்சலக ஆன்லைனில் புதுவசதி

சென்னை: ‘பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கும் நபர்களுக்கு போலீசார் மூலம் வழங்கப்படும் நன்னடத்தை சான்றிதழ் எளிதில் கிடைக்கும் வகையில் அஞ்சலகங்கள் மூலம் விண்ணப்பிக்கும் புதிய முறையை’ ஒன்றிய அரசின் வெளிவிவகாரத்துறை அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது. இது குறித்து ஒன்றிய அரசின் வெளிவிவகாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: பாஸ்போர்ட் வேண்டி விண்ணப்பிக்கும் நபர்கள், போலீஸ் துறையில் இருந்து நன்னடத்தை சான்று பெற வேண்டும். இதனால் தேவையற்ற காலதாமதம், அவசியமற்ற விசாரணைகளை தவிர்க்க புதிய முறை பயன்தரும். அதன்படி, இந்த நன்னடத்தை சான்று பெறுவதற்காக நாடு முழுவதும் உள்ள அஞ்சலகங்களில் உள்ள பாஸ்போர்ட் சேவா மையங்களில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த புதிய முறை 28ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும்போது போலீசார் விசாரணை மற்றும் சான்றுகளுக்கு பிரத்யோக நேரம் ஒதுக்கப்பட்டு முன்னதாகவே நன்னடத்தை சான்று கிடைக்கும். அஞ்சலகங்களின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய வசதி என்பது, இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு சென்று வேலை வாய்ப்பு பெறுவதற்காக மட்டும் அல்லாமல், இதர பணிகளுக்காக நன்னடத்தை சான்று தேவைப்படுவோருக்கும் உதவும். குறிப்பாக கல்வி, நீண்ட கால விசா பெறவும், வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்து செல்வதற்கான(இமிக்ரேஷன்) பணிகளுக்கும் உதவும்….

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்