போலீஸ் இன்ஸ்பெக்டரை தாக்கிய போதை வாலிபர்: குடும்பத்துடன் கைது

திருவொற்றியூர்: எண்ணூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிளாஸ்டின்டேவிட்(47), நேற்று முன்தினம் இரவு சுனாமி குடியிருப்பு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு உள்ள முதல் மாடியில் வசிக்கும் தினேஷ்(29) என்பவர் குடிபோதையில் அங்குள்ளவர்களிடம் தகராறு ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அந்த வழியாக சென்ற கிளாஸ்டின்டேவிட் இதை பார்த்து முதல் மாடிக்கு சென்று விசாரணை செய்தார். அப்போது தினேஷ் மற்றும் அவரது தாய் தாய் அமுதா(51), தங்கை சாந்தகுமாரி(25) ஆகிய மூன்று பேரும் சேர்ந்து இன்ஸ்பெக்டர் கிளாஸ்டின்டேவிட்டை தகாத வார்த்தைகள் பேசியதோடு அவரை கீழே தள்ளிவிட்டனர். இதில் நிலை தடுமாறி படிக்கட்டில் இருந்து உருண்டு கீழே விழுந்ததில் அவரது வலது கால் மற்றும் மார்பில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த போலீசார் அவரை சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்த எண்ணூர் போலீசார் தினேஷ் அவரது தாய் அமுதா, தங்கை சாந்தகுமாரி ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட தினேஷ் மீது எண்ணூர், ராயபுரம் போன்ற பகுதிகளில் கொலை, கொலை முயற்சி போன்ற 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது….

Related posts

மனைவிக்கு டார்ச்சர் கணவன் அதிரடி கைது

மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் லாரி டிரைவர் குத்திக்கொலை

சொகுசு கார் மோசடி: தவெக நிர்வாகி கைது