போலீசார் பதிவு செய்யும் எல்லா வழக்கிலும் கைது நடவடிக்கை கட்டாயம் இல்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: ‘காவல் நிலையத்தில் பதியப்படும் அனைத்து வழக்குகளிலும் கைது நடவடிக்கை கட்டாயமில்லை,’ என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறபித்துள்ளது. குற்ற வழக்குகளில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்வது ஒன்றிய, மாநில காவல்துறையின் சட்ட ரீதியான நடவடிக்கையாகும். இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் சில வாரங்களுக்கு முன் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘சாதாரணமாக விசாரித்து செல்லக் கூடிய விவகாரங்களில் கூட போலீசார் கைது நடவடிக்கையை மேற்கொள்கின்றனர். இது, தேவையற்ற ஒன்று என்பதால் இது குறித்து உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தி. உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும்,’ என தெரிவிக்கப்பட்டது.இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது வழங்கப்பட்ட உத்தரவில், ‘சாதாரணமாக, சம்பிரதாயமான முறையில் காவல் துறை செய்யும் கைது நடவடிக்கை, அது சம்பந்தப்பட்ட மனிதர்களின் கவுரவம், தன்மானத்துக்கு மிகப்பெரிய இழுக்காக அமைந்து விடும். கைது செய்வதற்கு சட்டம் அனுமதித்தாலும், அந்த அதிகாரத்தை எந்த காரணம் கொண்டும் தன்னிச்சையாக பயன்படுத்தக் கூடாது. இருப்பினும், கொடிய குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் தப்பித்து செல்ல வாய்ப்பு இருக்கும் போது கைது நடவடிக்கைகளை கண்டிப்பாக மேற்கொள்ளலாம். அதனால், இது குறித்த உத்தரவை ஒன்றிய, மாநில அரசுகளும், போலீசாரும் கருத்தில் கொண்டு வரும் காலங்களில், வழக்கிற்கு ஏற்றப்படி செயல்பட  வேண்டும்,’ என நீதிபதிகள் கூறியுள்ளனர்….

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

ஓணம் பண்டிகைக்கு ரூ.818 கோடி மது விற்பனை: கடந்த வருடத்தை விட ரூ.9 கோடி அதிகம்