போலீசாரை தாக்க முயன்ற 3 பேர் கைது

 

கோவை, ஜன.20: கோவை ஆர்.எஸ்.புரம் சிந்தாமணி அருகே போக்குவரத்து காவலர் ஆனந்தன் (30) நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஒரு பைக்கில் சென்ற 3 பேரை காவலர் ஆனந்தன் தடுத்து நிறுத்தினார். உடனே அவர்கள் தாங்கள் வந்த பைக்கில் தப்பிச்சென்றனர். உடனே காவலர் ஆனந்தன் தனது பைக்கில் அவர்களை பின்தொடர்ந்து சென்றுள்ளார். அப்போது அந்த 3 பேரும் ஒரு ஆட்டோ டிரைவரிடம் தகராறு செய்துகொண்டிருந்தனர்.

அவர்களை காவலர் ஆனந்தன் மடக்கிப்பிடிக்க முயன்ற போது அந்த 3 பேரும் காவலர் ஆனந்தனின் சட்டையை பிடித்து தாக்க முயன்றனர். அப்போது பொதுமக்கள் உதவியுடன் காவல் ஆனந்தன் அந்த 3 பேரையும் மடக்கிப்பிடித்து ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றார். விசாரணையில், பிடிபட்டவர்கள் ஹபீப் (23), அப்துல் (25) செல்வபுரம், அலாவுதீன் (25) என்பது தெரியவந்தது. இவர்கள் மீது ஏதேனும் வழக்குகள் இருக்கிறதா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்