போலீசாரின் ரோந்து வாகனம் மோதி 2 வாலிபர்கள் காயம்-உறவினர்கள் சாலை மறியலால் பரபரப்பு

பண்ருட்டி :  பண்ருட்டி விக்கிரவாண்டி- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகளை தவிர்ப்பதற்காக காவல்துறை சார்பில் ரோந்து வாகனம் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று காலை கீழகுப்பத்தை சேர்ந்த ஏசி மெக்கானிக் வீரமணி(24), நண்பர் மதன்குமார்(17) ஆகிய இருவரும் தனது ஊரிலிருந்து பைக்கில் சென்றனர். வீரமணிக்கு நிச்சயம் செய்யப்பட்டு திருமணத்திற்கு நான்கு நாட்கள் மட்டுமே உள்ளநிலையில் தனது நண்பருக்கு பத்திரிக்கை வைத்துவிட்டு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது கொள்ளுகாரன்குட்டை அருகே எதிரே வந்த ரோந்து வாகனம் தனது கட்டுப்பாட்டை இழந்து பைக்கின் மீது மோதியது. இதில் இருவரும் படுகாயமடைந்து கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.  ரோந்து வாகனம் அருகில் உள்ள ஒரு முந்திரி தோப்பின் மதில் சுவரில் மோதி நின்றது. இதில் ரோந்து வாகன ஓட்டுனர் பாபு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். காயமடைந்தவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியல் செய்தனர். தகவலறிந்த பண்ருட்டி டிஎஸ்பி சபியுல்லா மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் மருத்துவமனையில் ஆகும் முழு செலவையும் அரசே ஏற்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதில் உடன்பாடு ஏறப்பட்டதால் சாலைமறியல் கைவிடப்பட்டது. இந்த சாலை மறியலால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது….

Related posts

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்