போலி மதிப்பெண் சான்றிதழ் தலைமை ஆசிரியர் மீது மோசடி வழக்கு

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே கே.ஆர்.கண்டிகை கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இதில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஈவிலின் செல்வகுமாரி(50). இவர் மீது, திருவள்ளூர் மாவட்ட கல்வி அலுவலரான ராதாகிருஷ்ணன் திருவள்ளூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் கொடுத்திருந்தார். அதில் கூறியிருந்ததாவது, `கடந்த 1999ம் ஆண்டு ஆசிரியையாக பணியில் சேர்ந்த ஈவிலின் செல்வகுமாரி தற்போது தலைமை ஆசிரியையாக உள்ளார்.  இவரின் 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் உண்மை தன்மை சரி பார்த்தபோது மதிப்பெண் சான்றிதழ் போலியானது என  கண்டறியப்பட்டுள்ளது. எனவே, தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று கூறியிருந்தார். இதைடுத்து, தலைமை ஆசிரியர் ஈவிலின் செல்வகுமாரி மீது பெரியபாளையம் போலீசார் நேற்று மோசடி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்….

Related posts

பாலியல் தொல்லை தந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காததால் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

கள்ளதொடர்பு விவகாரம்; கடிதம் எழுதி வைத்து விட்டு பெண் தூக்கிட்டு தற்கொலை: கள்ளக்காதலன், கணவர் கைது

பைக்கில் ரோந்து சென்றபோது போலீஸ்காரர் மீது தாக்குதல்: ஐடி ஊழியர் கைது; ரவுடி ஓட்டம்