போலி கணக்கு விவகாரத்தால் டிவிட்டரை வாங்குவதை கைவிடும் எலான் மஸ்க்?

டெட்ராய்ட்: போலி கணக்குகள் தொடர்பாக டிவிட்டர் நிர்வாகம் தரவுகளை தரவில்லை என்றால், ரூ3.41 லட்சம் கோடி ஒப்பந்தத்தை  முடிவுக்கு கொண்டு வரப் போவதாக எலான் மஸ்க் எச்சரித்துள்ளார்.உலகின் நம்பர்-1 பணக்காரரும், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க், கடந்த ஒரு மாதத்துக்கு முன் டிவிட்டர் நிறுவனத்தை ரூ3.41 லட்சம் கோடிக்கு வாங்க உள்ளதாக தெரிவித்தார். இதுதொடர்பான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இதையடுத்து, டிவிட்டர் நிறுவனத்தில் ஆட்குறைப்பு, டிவிட்டுக்கு கட்டணம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க போவதாக தெரிவித்திருந்தார். இதற்கு கடும் எதிர்ப்புகளும், கண்டனம் எழுந்தன.இந்நிலையில், டிவிட்டரில் எவ்வளவு போலி கணக்குகள் உள்ளது என்பது குறித்து டிவிட்டர் நிர்வாகம் விவரங்களை வழங்க வேண்டும் என்று எலான் மஸ்க் கேட்டிருந்தார். ஆனால், போலி கணக்கு தொடர்பாக முழு விவரங்களை டிவிட்டர் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதுதொடர்பாக தனது வழக்கறிஞர்கள் மூலம் டிவிட்டர் நிர்வாகத்துக்கு நோட்டீசும் எலான் மஸ்க் அனுப்பி உள்ளார். இதற்கு, டிவிட்டர் நிர்வாகம் சோதனை முறைகள் குறித்த விவரங்களை மட்டுமே வழங்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. இது, ‘மஸ்க்கின் தரவுக் கோரிக்கைகளை மறுப்பதற்கு சமம்’ என்று அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். போலி கணக்குகள் தொடர்பாக டிவிட்டர் நிர்வாகம் தரவுகளை தரவில்லை என்றால், ரூ3.41 லட்சம் கோடி ஒப்பந்தத்தை  முடிவுக்கு கொண்டு வரப் போவதாக எலான் மஸ்க் எச்சரித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது….

Related posts

பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல் – தொழிலாளர் கட்சி முன்னிலை

இஸ்ரேல் மீது 200 ஏவுகணை வீச்சு

ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் நான் மட்டும் தான்: ஜோ பைடன் திட்டவட்டம்