போலி ஆவணத்தில் பாஸ்போர்ட் தயாரித்த இலங்கை அகதி குடும்பத்துடன் கைது

பூந்தமல்லி: போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் தயாரித்த இலங்கை அகதி குடும்பத்தினரை போலீசார் கைது செய்தனர். போரூர், ராமகிருஷ்ணா நகரில் வசிக்கும் ஜெரால்டு கிலேயஸ் (49) என்பவர், போலி ஆவணங்கள் மூலம் புதிய பாஸ்போர்ட் பெற்றுள்ளதாக போரூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விசாரணையில், ஜெரால்டு கிலேயஸ் தனது மனைவி மற்றும் 3 மகள்களுடன் கடந்த 2017ம் ஆண்டு இலங்கையில் இருந்து அகதியாக சென்னைக்கு வந்து, போரூரில் குடும்பத்துடன் வசித்து வருவதும், இவர்கள் குடும்பத்துடன் கனடா நாட்டுக்கு குடிபெயர முடிவு செய்துள்ளனர். இதற்காக, ஜெரால்டு கிலேயஸ் போலி ஆவணங்கள் மூலம் தனக்கு, தனது மனைவிக்கு மற்றும் மகள்களான மேரி ஜென்சிகா (23), ரெஜினோல்ட் (21), மேரி சன்ஜிகா (20) ஆகிய 5 பேருக்கு புதிய பாஸ்போர்ட் தயாரித்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜெரால்டு கிலேயஸ் உள்பட 5 பேரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்….

Related posts

சொகுசு கார் மோசடி: தவெக நிர்வாகி கைது

உரிய ஆவணம் இல்லாத பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த 3 பேர் கைது

காரைக்குடியில் பிரபல ரவுடி சுரேஷ் கைது