போலி ஆவணங்கள் மூலம் வணிக நிறுவனங்களை தொடங்கி 5 கோடி வரி வருவாய் ஏய்ப்பு

* தொழிலதிபரின் வங்கி கணக்கு முடக்கம்* வணிகவரித்துறை அதிரடி நடவடிக்கைசென்னை: போலி ஆவணங்கள்  மூலம் வணிக நிறுவனங்களை தொடங்கி, பல்வேறு நிறுவனங்களுக்கு சரக்கு அனுப்பாமல் உள்ளீட்டு வரியினை பயன்படுத்த உதவியதால் ரூ.5 கோடி வணிகவரித்துறைக்கு வரி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, வணிகவரித்துறை அளித்த புகாரின் பேரில் தொழிலதிபரின் வங்கி கணக்கு முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து வணிகவரித்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கை:வணிக நிறுவனங்கள் உள்ளீட்டு வரியினை தவறுதலாக பயன்படுத்தும் புகாரின் பேரில் சென்னையை சேர்ந்த  சாய் பாலாஜ் இம்பெக்ஸ் எனும் வணிக நிறுவனத்தில் சென்னை வணிகவரித்துறை நுண்ணறிவு பிரிவினரால் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் போது, ஸ்ரீசாய் பாலாஜ் இம்பெக்ஸ் நிறுவன உரிமையாளர் மதுரவாசல் சீனிவாசன் வரதராஜன் என்பவர் பிற நபர்களின் பெயர்களில் போலியான ஆவணங்கள் மூலம் பல வணிக நிறுவனங்களை தொடங்கி பல்வேறு  நிறுவனங்களுக்கு சரக்கு அனுப்பாமல் உள்ளீட்டு வரி பயனுக்காக போலி பட்டியல்கள் அளித்தது தெரியவந்தது. இந்த வணிகர் போலி பட்டியல் அளித்ததன் மூலம் உள்ளீட்டு வரியினை பல நிறுவனங்கள் தவறுதலாக பயன்படுத்த உதவியதன் பேரில் அரசுக்கு ரூ.5 கோடியே 67 லட்சத்து 91 ஆயிரத்து 970 வரி வருவாய் இழப்பு ஏற்பட காரணமாக இருந்து குற்ற நடவடிக்கைகள் புரிந்துள்ளார். இக்குற்ற நடவடிக்கைகளுக்காக மதுரவாசல் சீனிவாசன் வரதராஜன் மீது குற்ற வழக்கு பதிவு செய்ததின் பேரில் கடந்த 11ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், அவர்மேற்கு முகப்பேரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கும்மிடிப்பூண்டியில் உள்ள எச்டிஎப்சி வங்கி, கும்மிடிப்பூண்டியில் உள்ள ஆக்சிஸ் வங்கி, திருவள்ளூரில் 2 இந்தியன் வங்கிகளில் பண பரிவர்த்தனை செய்துள்ளார். மேலும் அவரது வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. …

Related posts

விளையாட்டு மைதானத்தில் குப்பை, கட்டிட கழிவு கொட்டுவதற்கு எதிர்ப்பு: இளைஞர்கள் சாலை மறியல்

ஊராட்சி தலைவர் வீட்டில் கல்வீச்சு 20 பேர் மீது வழக்கு

பிளஸ் 2 படித்துவிட்டு கிளினிக் நடத்தி வந்த போலி டாக்டர் கைது: சுகாதாரத்துறை நடவடிக்கை