போர்க்கால அடிப்படையில் மழைநீர் வெளியேற்றம் 14 சுரங்கப்பாதைகளில் போக்குவரத்துக்கு அனுமதி: சென்னை மாநகராட்சி தகவல்

சென்னை: சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள் செய்தி குறிப்பு: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 16 சுரங்கப்பாதைகள் மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக பெரும்பாலான சுரங்கப் பாதைகளில் மழைநீர் தேங்கி 8 சுரங்கப்பாதைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினமே மாநகராட்சி பணியாளர்களால் மோட்டார் பம்புகள் மூலம் அனைத்து சுரங்கப்பாதைகளிலும் தேங்கிய மழைநீர் வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.  திரு.வி.க. நகர் மண்டலம், கணேசபுரம் சுரங்கப்பாதை, கோடம்பாக்கம் மண்டலம் மேட்லி சுரங்கப்பாதை மற்றும் ரங்கராஜபுரம் இருசக்கர வாகன சுரங்க பாதைகளில் மட்டுமே அதிக அளவில் மழை நீர் தேக்கம் இருந்து போக்குவரத்து தொடர்ந்து நிறுத்தப்பட்டிருந்தது. மீதமுள்ள அனைத்து சுரங்கபாதைகளிலும் மழைநீர் விரைந்து வெளியேற்றப்பட்டு போக்குவரத்திற்கு இடையூறின்றி சீர்செய்யப்பட்டது.கணேசபுரம்  சுரங்க பாதையில் தேங்கிய மழைநீர் மோட்டார் பம்புகள் மூலம் தொடர்ந்து  வெளியேற்றப்பட்டு தற்போது போக்குவரத்து சீர்செய்யப்பட்டுள்ளது. கோடம்பாக்கம் மண்டலம் மேட்லி சுரங்கப்பாதை மற்றும் ரங்கராஜபுரம் இருசக்கர வாகன சுரங்க பாதைகளில்   மழை நீர் வெளியேற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சுரங்கபாதையிலும் மழைநீர் விரைந்து வெளியேற்றப்பட்டு போக்குவரத்து கூடிய விரைவில் சீர்செய்யப்படும். சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வரும் 16 சுரங்கப்பாதைகளில் 14 இடங்களில் மாநகராட்சி பணியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட துரித நடவடிக்கையின் காரணமாக எவ்வித நீர்த் தேக்கமுமின்றி போக்குவரத்து சீர்செய்யப்பட்டுள்ளது….

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்