Saturday, September 21, 2024
Home » போருக்குப் போன புளிச்ச கீரை!

போருக்குப் போன புளிச்ச கீரை!

by kannappan
Published: Last Updated on

நன்றி குங்குமம் டாக்டர் புளிச்சக்கீரை வெப்ப மண்டலப் பகுதிகளில் வளரக் கூடிய கீரை வகையாகும். இந்தியாவில் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆகிய மாநிலங்களில் இந்த கீரையை விரும்பி உண்கின்றனர். இதன் புல்லி வட்டத்தின் நிறத்தை வைத்து  மூன்று வகையாக பிரிக்கலாம். இது, இளஞ் சிவப்பு, அடர் சிவப்பு, பச்சை நிறங்களில் காணப்படுகிறது. புளிச்ச கீரையும் (Hibiscus sabdariffa), புளியாரை கீரையும் (Oxalis corniculate) வேறு வேறாகும். இதை நிறைய பேர் ஒன்று என நினைத்து பயன்படுத்துகிறார்கள்.புளிச்சக் கீரையின் இலை மூன்றுஅல்லது ஐந்தாகப் பிரிவுப்பட்டு  காணப்படும். இது, இரண்டு முதல் இரண்டரை மீட்டர் உயரத்தில் வளரும் இயல்புடையது. புளியாரைக் கீரை மஞ்சள் நிறப் பூவுடன் மெல்லிய இலைகளுடன் சிறு செடியாகக் காணப்படும். புளிச்ச கீரையை ஆந்திராவில் ”கோங்குரா ”என்றும் ,மகாராஷ்டிராவில் ”அம்பாடி” என்ற பெயரிலும், மணிப்பூரில் ‘சோக்ரி‘ என்ற பெயரிலும் பெருமளவில் பயன்படுத்துகின்றனர்.இதன் வணிகப் பெயர் ‘ரோசல்‘. இதன் தண்டிலிருந்து ஒருவித நார் எடுக்கப்படுகிறது. இந்த நாரை வைத்துத் தயாரிக்கப்பட்ட‘காம்பட் ஹெல்மட்‘ இரண்டாம் உலகப்போரின் போது வீரர்கள் தலைக்கவசமாக பயன்படுத்தியுள்ளனர். இதன் நாரைவைத்து உருவாக்கப்பட்ட சட்டைகளை, ‘சாக்ளோத்‘ என்ற பெயரில் சாம்பல் புதன் அன்று அணியும் வழக்கம் இருந்துள்ளது. இது மிகவும் தொன்மையான  கீரை வகைகளில் ஒன்றாகும். இது புளிச்சிறுகீரை, காசினி கீரை, காச்சுரை, காச்சக்கீரை என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது.100 கிராம் புளிச்ச கீரையில்  8.7% கார்போஹைட்ரேட், 3.5 % புரதம், 0.3% கொழுப்பு, நார்ச்சத்து-17% உள்ளன. வைட்டமின் ஏ-1000 IU, வைட்டமின் சி-2.3 மி.கி, தையமின் 0.2 மி.கி, ரிபோஃபிளேபின் 0.4 மி.கி, நியாசின் 1.4 மி.கி, கால்சியம்-240 மி.கி, பாஸ்பரஸ் 37மி.கி, மக்னீசியம் 51 மி.கி, இரும்புச்சத்து-5 மி.கி, உள்ளன.புளிச்சக்கீரையின் மலர்கள், புல்லி வட்டத்தில் ஏராளமான ‘ஆந்திரோசயனின்‘ நிறமி உள்ளது. இது, ஒரு மிகச்சிறந்த ஆன்ட்டிஆக்சிடென்ட்டாக, புற்றுநோய் தடுப்பு சிகிச்சையில் பயன்படுகிறது. இதில் பீட்டா கரோட்டினும் ஒரு சிறந்த ஆன்ட்டிஆக்சிடென்ட்டாக உடலுக்கு நன்மை தருகிறது. வைட்டமின் ஏ அதிகளவில் இருப்பதால் கண் பார்வைக்கு இக்கீரை அருமருந்தாகும்.அகத்தியர் குணவாகடத்தில், இக்கீரையைச் சாப்பிட்டு வந்தால் தேகம் சித்தியடையும், பசியின்மை, மந்தம் நீங்கும்,இல்லற வாழ்வில் இன்பமுண்டாகும், விந்து பெருகும், உடல் வன்மையுண்டாகும் என்று கூறப்பட்டுள்ளது.தேகசித்தி யாகும் சிறுகாசம் மந்தமறும்போகமுறும் விந்துநற் புஷ்டியுண்டாம்-வாகாம்வெளிச்சிறுமான் நோக்குவிழி மென்கொடியே! நாளும்புளிச்சிறு கீரையுணும்போது

இது இன்பம் பெருக்கி (காம உணர்வைத் தூண்டும்). தோல் வறட்சியகற்றி, மலமிளக்கியாகச் செயல்படும். இதனை கீரையாகவும், ஊறுகாயாகவும் பெருமளவில் பயன்படுத்துகின்றனர்.

உடல் எடை குறைய விரும்புபவர்கள் மூன்று புளிச்சக் கீரை இலைகளை இரண்டு டம்ளர் தண்ணீரில் கொதிக்கவைத்து வடிகட்டி குடித்துவர வேண்டும்.  மூன்று மாதங்கள் தொடர்ந்து இப்படிச் செய்தால் உடல் பருமன் நன்கு குறையும். தேவையற்ற கொழுப்புகள் கரையும் ரத்தம் சுத்தமாகும். உடலில் தோன்றும் கட்டிகளுக்கு இதன் இலையை அரைத்து  கட்டிவர, கட்டி பழுத்து உடையும்.புளிச்ச கீரையின் மலர்களை, இடித்து சர்க்கரை, ஏலம் சேர்த்துக் காய்த்து குடித்துவந்தால், தொண்டை கரகரப்பு, தொண்டைப் புண்கள், குடல்புண்கள், குணமடையும், உடல் வெப்பம் தணிந்து குளிர்ச்சியடையும். இது பல நாடுகளில் ‘சோரல்  (Sorrel) பழ ஜுஸ் ஆகப் பயன்படுத்துகிறார்கள்.புளிச்ச கீரையின் இலைகள்-3, சீரகம் சிறிதளவு சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீரில் நன்றாகக் கொதிக்கவைத்துக் குடித்துவர, ரத்தத்தில் உள்ள கொழுப்பு கரைந்து உயர் ரத்த அழுத்தமும் கட்டுப்படுகிறது. புளிச்ச கீரையை வாரம் இருமுறையாவது உணவாகப் பயன்படுத்தினால், உடலில்  சேரக்கூடிய தேவையற்ற உப்புக்கள், அமிலங்கள், காரங்கள் நீங்கி உடல் சுத்தியாகும். இதில் தேவையான கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் உள்ளதால் எலும்பும் தசையும் வலுவடையும். ஆகவே, சந்தைகளில் புளிச்ச கீரையைப் பார்த்தவுடன் வாங்கிச் சமைத்துப் பயனடைவோம்.தொகுப்பு :  திலீபன் புகழ்புளிச்சக்கீரைப் பொடிதேவையானவைபுளிச்சக்கீரை-1 கட்டு, சீரகம்-10 கிராம், பெருங்காயம்- 10 கிராம், வெந்தயம்- 5 கிராம், மல்லித் தூள்-10 கிராம், மிளகாய்-8 முதல் 12, உளுந்தம் பருப்பு-10 கிராம்உப்பு தேவையான அளவுபூண்டு-5 பல், கறிவேப்பிலை சிறிதளவு இவற்றை, வாணலியில் நல்லெண்ணெய்விட்டு நன்றாகப் பொன் நிறம் வரும்வரை வதக்கி, சூடு ஆறிய பின்னர், பொடித்துவைத்து இட்லி, தோசைக்கு சைடு டிஷ்ஷாகவும் சோற்றில் பிசைந்தும் சாப்பிடலாம். இதனால், வயிற்று மந்தம், பசியின்மை, செரியாமை நீங்கி உடல் வலுவாகும். மேலே சொன்னவற்றையே நன்கு நீர் விட்டு அரைத்து கடுகு, எண்ணெய் சேர்த்து தாளித்துஎடுத்தால், சுவையான புளிச்சக்கீரை தொக்கு தயார்….

You may also like

Leave a Comment

12 − eleven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi