போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவர் கொலை உரிமையாளர் நீதிமன்றத்தில் சரண்: தனிப்படை கோவை சென்றது

சென்னை: சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்தவர்  ராஜ் (45). இவரை இப்பகுதியில் உள்ள தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு அனுமதிக்கப்பட்ட சிலமணி நேரத்திலேயே ராஜிக்கு அடிபட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அவருடைய மனைவிக்கு கடந்த 4ம் தேதி போன் செய்து தகவல் தெரிவித்துள்ளனர். குடும்பத்தினர் சென்று பார்த்த போது, ராஜ் இறந்து கிடந்ததார். இதுகுறித்து அண்ணா சாலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.  போதை மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்ட ராஜி மர்மமான முறையில் மரணம் அடைந்தது குறித்து, போலீசார் தனியார் மறுவாழ்வு மைய ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். காவல் துணை ஆணையர் பகலவன் தலைமையிலான குழு மறுவாழ்வு மையத்தில் ஆய்வு நடத்தினர். அப்போது அங்கே உடைந்த நிலையில் பிரம்பு கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது. உயிரிழந்த ராஜியின் உடலிலும் பிரம்பால் அடித்த தடம் இருப்பதாகவும், வாயில் பல் அனைத்தும் உடைந்திருப்பதாகவும் அவரின் உறவினர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.இந்த நிலையில், மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்ட ராஜி மர்மான முறையில் மரணம் அடைந்த விவகாரத்தில், ராஜியின் மனைவி அளித்த புகாரின் பேரில், போலீசார் கொலை வழக்காக பதிவு செய்தனர். மேலும், அந்த மறுவாழ்வு மையத்தைச் சேர்ந்த யுவராஜ், சதீஷ் உள்ளிட்ட 7 பேரை அண்ணாசாலை போலீசார் கைது செய்தனர். இதில் தலைமறைவாக இருந்த மறுவாழ்வு மையத்தின் உரிமையாளர் கார்த்திகேயனை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், கோயம்புத்தூர் நீதிமன்றத்தில் கார்த்திகேயன் நேற்று சரணடைந்தார். அவரை சென்னை அழைத்து வர அண்ணா சாலை தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர்….

Related posts

பந்தலூர் அருகே கர்நாடகாவில் இருந்து கேரளாவிற்கு கடத்திய உயர் ரக போதை பொருள் பறிமுதல்

தண்ணீர் பிடிப்பதில் தகராறு நண்பரை கத்தியால் குத்திக்கொன்ற வாலிபர் கைது

காரில் புகையிலை பொருட்கள் கடத்திய ராஜஸ்தான் வாலிபர் கைது