போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

கோவில்பட்டி, ஜூலை 9: உலக போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு தினத்தையொட்டி நெல்லை சமூக சேவை சங்கம் சார்பில் காமநாயக்கன்பட்டியில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. காமநாயக்கன்பட்டி பங்குதந்தை அந்தோணி குரூஸ் தலைமை வகித்தார். கோவில்பட்டி மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் மிகா, கொப்பம்பட்டி எஸ்ஐ ரமேஷ், நெல்லை சமூக சேவை சங்க இயக்குநர் பிரான்சிஸ் சேவியர் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். போதைப் பொருட்களில் இருந்து சமுதாயத்தை காப்போம். போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராக போராடுவோம். போதைப் பொருட்களினால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கி கூறப்பட்டது. கருத்தரங்கில் காமநாயக்கன்பட்டி புனித அலாசியஸ் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் ஆரோக்கியராஜ் மற்றும் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை