போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

கடத்தூர், ஜூன் 27: கடத்தூர் காவல்துறை சார்பில், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்ட சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி நடத்தினர். முன்னதாக கடத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து, பேரணியை இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி கொடியசைத்து துவக்கி வைத்தார். பஸ் நிலையம், கோயில், கடைவீதி, மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய வீதிகளில் வழியாக ஊர்வலமாக வந்து விழிப்புணர்வு குறித்து கோஷமிட்டனர். இப்பேரணியில், போலீசார் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதேபோல், புட்டிரெட்டிப்பட்டி அரசு பள்ளி நாட்டுநல பணி திட்ட முகாம் சார்பில், திட்ட அலுவலர் முருகன் தலைமையில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழியை மாணவ, மாணவிகள் எடுத்துகொண்டனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை