போதையில் வாகனம் ஒட்டியவர்களுக்கு ₹50 ஆயிரம் அபராதம் செய்யாறில் போலீசார் வாகன தணிக்கை

செய்யாறு, செப்.8: செய்யாறில் டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையில் போலீசார் நேற்று மாலை திடீர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அதில் மது அருந்தி வாகனம் ஓட்டி வந்த 5 நபர்களுக்கு தலா ₹10ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. செய்யாறில் அரசு கலைக்கல்லூரி அருகே புறவழிச்சாலை சந்திப்பில், செய்யாறு டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையிலான போலீசார் நேற்று மாலை திடீர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது 18 வயதுக்கு கீழ் இருசக்கர வாகனங்களை ஓட்டுவோர், ஹெல்மெட் அணியாமல் வாகனங்களை ஓட்டுவோர், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவோர் என பல்வேறு நபர்களை மடக்கி எச்சரித்தும், அபராதமும் விதித்தனர்.

மேலும், பொது மக்களிடையே தலைக்கவசத்தில் முக்கியத்துவம் குறித்தும் இருசக்கர வாகனம் ஓட்டும் போது கவனிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்தும் செய்யாறு டிஎஸ்பி வெங்கடேசன் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினார். இந்நிகழ்வில் செய்யாறு காவல் ஆய்வாளர் ஜீவராஜ் மணிகண்டன், உதவி ஆய்வாளர் சங்கர், கன்னியப்பன், போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அதில் மது குடித்து விட்டு வாகனத்தை ஓட்டி வந்த 5 நபர்களுக்கு தலா ₹10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி