போதையில் ரகளை செய்த 2 பேர் கைது சேத்துப்பட்டு அருகே மக்களுடன் முதல்வர் முகாமில்

சேத்துப்பட்டு, செப். 14: சேத்துப்பட்டு அருகே மக்களுடன் முதல்வர் முகாமில் போதையில் ரகளை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியம் சித்தாத்துரை கிராமத்தில் கடந்த மாதம் 14ம் தேதி முத்தாலம்மன் கோயில் அருகே மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாம் நடைபெற்றது. அப்போது ஆத்துறை கிராமத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் அன்பு (48) கன்னியப்பன் மகன் தட்சிணாமூர்த்தி(35) ஆகிய இருவரும் குடித்துவிட்டு அரசு அலுவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்து இடையூறு செய்தனர். மேலும் அதிகாரிகளை மிரட்டும் தோரணையில் பேசி வீடியோ எடுத்து மிரட்டினர்.

இதுகுறித்து சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் வெங்கடேசன் சேத்துப்பட்டு போலீசில் 14.8.24 அன்று புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் நாராயணன் வழக்குப்பதிவு செய்து அரசு அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்த 2 பேரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று காலை தட்சிணாமூர்த்தி நிலத்தில் விவசாய வேலை செய்து வருவதாக சேத்துப்பட்டு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி சப்- இன்ஸ்பெகட்டர் நாராயணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தலைமறைவாக போலீசுக்கு டிமிக்கி கொடுத்த தட்சிணாமூர்த்தி அன்பழகன் ஆகிய இருவரையும் கைது செய்து போளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related posts

வாலாஜாபாத் பகுதிகளில் அதிக ஹாரன் சத்தம் எழுப்பும் குவாரி லாரிகள்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

சிலம்ப போட்டி வெற்றியை தோல்வியாக அறிவிப்பு; மாணவிகள் திடீர் உள்ளிருப்பு போராட்டம்: மேலக்கோட்டையூரில் பரபரப்பு

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நாளையே துணை முதல்வராக அறிவித்தாலும் ஆச்சரியமில்லை: பவள விழா ஏற்பாடு பணி ஆய்வின்போது அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேட்டி