போதைப்பொருள் கடத்திய வாலிபர் கைது: 605 கிலோ குட்கா, மினிலாரி பறிமுதல்

 

செங்கல்பட்டு, ஏப். 21: செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள்கோவில் அருகே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை சத்யா நகர் பகுதியில் மறைமலைநகர் சட்டம் – ஒழுங்கு காவல் ஆய்வாளர் கோவிந்தராஜன் தலைமையில் நேற்று காலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அந்த வாகனத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், கூல்லிப், மாவா மற்றும் புகையிலை உள்ளிட்ட பல்வேறு வகையான ரூ.1 லட்சம் மதிப்பிலான 605 கிலோ எடை கொண்ட போதைப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இதனையடுத்து, வாகனத்தோடு அந்த நபரை காவல்நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வாகனத்தை ஓட்டி வந்த நபர் மேற்கு தாம்பரம் ரங்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்த எத்திராஜ் என்பவரது மகன் நிர்மல் குமார் (32) என்பதும், இவர் குட்கா பொருட்களை மொத்தமாக வாங்கி மேற்கு தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு வரை கடைகளுக்கு வினியோகம் செய்து வந்ததும் தெரிய வந்தது. பின்னர் அவரை கைது செய்து செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவரது வாகனம் மற்றும் 605 கிலோ குட்கா பெருட்கள் என அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்