போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த பிரபல கடத்தல் மன்னன் பெங்களூருவில் கைது..!!

பெங்களூரு: சென்னையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த ஆப்ரிக்காவை சேர்ந்த சர்வதேச குற்றவாளி பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் பார்சல் மூலமாக போதைப்பொருள் கடத்தப்படுவதாக போதைப்பொருள் தடுப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நடத்தப்பட்ட சோதனையில் உயரக போதை பொருட்கள் அட்டை பெட்டியில் அடைக்கப்பட்டு கடத்த இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 968 கிராம் அம்பேட்டமைன், 2 கிலோ 889 கிராம் எம்பிட்ரைன் ஆகிய போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டது. மும்பையில் இருந்து கொண்டுவரப்பட்ட இந்த போதை பொருட்கள், ஸ்கேன் செய்யும் போது சிக்காமல் இருக்க பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. போதைப்பொருளை கடத்திய முக்கிய குற்றவாளியான ஆப்ரிக்கா நாட்டை சேர்ந்த பெஞ்சமின் என்ற ஆண்டனி கைது செய்யப்பட்டார். சென்னையை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வந்த ஆண்டனி மீது சென்னையில் 2 போதைப்பொருள் கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்துள்ளது. …

Related posts

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு சிறுவன் மீது போக்சோ வழக்கு

பிளஸ் 1 மாணவி பாலியல் பலாத்காரம்: அத்தையின் கணவர் கைது

மேட்ரிமோனியல் மூலம் டிஎஸ்பி, பைனான்சியர் உள்பட 50 பேரை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி சிக்கியது எப்படி?: பரபரப்பு தகவல்கள்