போதிய மழை இல்லாததால் வருசநாடு பகுதியில் மூல வைகை ஆறு வறண்டது

வருசநாடு, ஜூலை 26: வருசநாடு பகுதியில் போதிய மழை இல்லாத காரணத்தால் மூல வைகை ஆறு வறண்ட நிலையில் காணப்படுகிறது. கடமலை – மயிலை ஒன்றிய கிராமங்களில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகளவில் காணப்பட்டு வருகிறது. மேலும் போதிய அளவு மழை இல்லாத காரணமாக வருசநாடு மூல வைகை ஆற்றில் நீர்வரத்து முற்றிலுமாக வறண்டு போனது. இதனால் மூல வைகையாற்றில் அமைக்கப்பட்டுள்ள உறை கிணறுகளில் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது.

இதனால் கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாய நிலை உருவாகியுள்ளது. மேலும், விவசாய கிணறுகளில் நீர்மட்டம் குறைந்ததால், இப்பகுதியில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே, இப்பிரச்னைக்கு இயற்கை மட்டுமே தீர்வாக அமைய முடியும் என்பதால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அனைவரும் கன மழையை எதிர் நோக்கி காத்திருக்கின்றனர். இந்தநிலையில், கடந்த சில நாட்களாக மூல வைகை ஆற்றுப்பகுதியில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்