போதிய பயணிகள் இல்லாததால் இலங்கை செல்லும் 4 விமானங்கள் ரத்து

மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தில் இருந்து இலங்கைக்கு செல்லும் லங்கன் மற்றும் ஏர் இந்தியாவின் 4 விமானங்கள், போதிய பயணிகள் இல்லாததால் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இலங்கையில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால், சென்னை விமான நிலையத்திலிருந்து இரவு நேரங்களில் இலங்கைக்கு செல்லும் விமானங்களில் பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. எனவே போதிய பயணிகள் இல்லாததால், சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை 12.20 மணிக்கு இலங்கையின் கொழும்பு நகருக்கு செல்லும் ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டது.இதேபோல் இலங்கையில் இருந்து சென்னைக்கு இன்று அதிகாலை 2.25 மணிக்கு வரவேண்டிய, இங்கிருந்து அதிகாலை 3.25 மணிக்கு இலங்கை செல்லும் லங்கன் ஏர்லைன்சின் 2 விமானங்களும் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இந்நிலையில், இன்று ஞாயிறு விடுமுறை என்பதாலும், இரவு நேரங்களில் இலங்கைக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை குறைந்ததாலும், இன்று ஏர் இந்தியா மற்றும் லங்கன் ஏர்லைன்சின் 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. எனினும், நாளை இரவு இலங்கைக்கு வழக்கம் போல் விமான சேவை தொடரும் என விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், சென்னை விமான நிலையத்திலிருந்து இலங்கையின் கொழும்பு நகருக்கு தனியார் நிறுவன விமானங்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டன….

Related posts

சொத்து தகராறில் பெண் தற்கொலை

சிறுவர் பூங்கா, நடைபாதை உள்ளிட்ட வசதிகளுடன் மேடவாக்கம் பெரிய ஏரியை சீரமைக்க முடிவு: விரைவில் பணிகள் தொடங்குகிறது

சென்னை கடற்கரை – திருவண்ணாமலை இடையிலான மெமு ரயில்களில் கூடுதல் பெட்டிகள்: பயணிகள் வரவேற்பு