போடி நகர் பகுதியில் கட்டுப்பாடின்றி சுற்றி திரியும் நாய்கள் கூட்டம்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

 

போடி, ஜூலை 5: போடி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. தற்போது மக்கள் குடியிருப்புகளும், வாகனங்களும் கணிசமாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து சாலைகளிலும், தெருக்களிலும் ஆங்காங்கே கோழிக்கறி கடைகளும், மட்டன் கறி கடைகளும், மீன்கடைகளும் வைத்து நடத்தி வருகின்றனர். இங்கு வெட்டப்படுகின்ற இறைச்சி கழிவுகளை சாலையோரம் குப்பைகளுடன் கொட்டி விடுகின்றனர். இதனால் சுகாதார கேடு ஏற்படும் நிலை உள்ளது. மேலும் அந்தப் பகுதியில் சுற்றித் திரியும் நாய்கள் அனைத்தும் குப்பை பகுதிகளை கிளறி கழிவுகளை பரப்பி விடுகின்றன.

மேலும் அவைகள் சாலையிலேயே தங்களுக்குள் சண்டையிடுகின்றன. மேலும் திடீரென வாகனங்களின் குறுக்கே பாய்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். இந்தப் பகுதியில் செல்லும் பொதுமக்கள், முதியோர், குழந்தைகள் அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது. எனவே கட்டுப்பாடின்றி சுற்றித் திரியும் தெரு நாய்களை விரைவில் அப்புறப்படுத்தி விபத்துகள் ஏற்படாமலும், பொதுமக்கள், குழந்தைகள் பயமின்றி சென்று வரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்,

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை