போடி நகராட்சியில் 66 இடங்களில் தூய்மை பணி

 

போடி, அக். 2: போடி நகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 33 வார்டு பகுதிகளிலும் அக்.1ம் தேதி காலை 1 மணி நேரம் தூய்மை பணி செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி போடி நகர்மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர், கமிஷனர் ராஜலட்சுமி ஆகியோர் தலைமையில் 33 வார்டுகளில் 66 இடங்களில் தூய்மைப் பணிகள் நடந்தது. போடி அரசு மருத்துவமனை வளாகம் முழுவதும் கூட்டுத்தூய்மைப் பணி ெசய்யப்பட்டது. அதில் நகர்மன்ற துணைத்தலைவர் கிருஷ்ணவேணி, அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ரவீந்திர நாத், நகர்மன்ற உறுப்பினர்கள் சங்கர், சரஸ்வதி, துப்புரவு அலுவலர் மணி கண்டன், துப்புரவு ஆய்வாளர்கள் சுரேஷ்குமார், அகமது கபீர், கணேசன் மற்றும் நகராட்சி பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை