போடியில் நகராட்சி அலுவலகம் பின்புறம் குவிக்கப்படும் குப்பையால் மக்களுக்கு சுகாதாரக்கேடு

போடி : போடியில் நகராட்சி அலுவலகம் பின்புறம் குவிக்கப்படும் குப்பையால், பொதுமக்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.போடி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. முதல்நிலை நகராட்சியான இங்கு சேகரமாகும் குப்பைகளை,வடக்கு மலைச்சாலையில் 7 கி.மீ தொலைவில் உள்ள சிறைக்காடு பகுதி நகராட்சி குப்பை கிடங்கில் கொட்டுகின்றனர். இந்நிலையில், தூய்மைப் பணியாளர்கள் சிலர் நகர்ப்புறங்களில் சேகரமாகும் குப்பைகளை சிறு, சிறு பைகளில் நிரப்பி, நகராட்சி அலுவலக பின்புற சுவர்களை ஒட்டி சாலையில் குவிக்கின்றனர். இதனால், துர்நாற்றம் வீசி, அக்கம்பக்கத்தினருக்கு சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. கொசுக்கள் உருவாகி பொதுமக்களின் தூக்கத்தை கெடுக்கிறது. எனவே, நகராட்சி அலுவலகம் கொட்டி வைத்திருக்கும் குப்பைகளை அகற்றவும், குப்பைகளை எப்போதும் போல, சிறைக்காடு பகுதி குப்பைக் கிடங்கில் கொட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

Related posts

மழைநீர் கால்வாய் உடைந்து சுரங்கப்பாதையில் நீர் கசிவு: வாகன ஓட்டிகள் அவதி

திருவொற்றியூர் 7வது வார்டில் ₹27 லட்சம் செலவில் தெருவிளக்கு பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

கானத்தூர் முதல் மாமல்லபுரம் வரை இசிஆரில் சைக்ளோத்தான் போட்டி: 1300 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு