போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபரை மிரட்டி ஓரினச்சேர்க்கை: இன்ஸ்பெக்டர் மீது வழக்குப்பதிவு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள அயிரூர் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தவர் ஜெயசனல். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அயிரூர் பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். அவரை வழக்கில் இருந்து விடுவிப்பதாக கூறி இன்ஸ்பெக்டர் ஜெயசனல் ரூ.1.5 லட்சம் லஞ்சம் வாங்கியுள்ளார். அதற்கு பிறகும் வாலிபரை கைது செய்து சிறையிலடைத்தார். பின்னர் ஜாமீனில் விடுதலையான பிறகு, போலீஸ் உயரதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயசனல் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்தநிலையில் அவர், வேறொரு போக்சோ வழக்கில் கைதான ஒரு வாலிபரை மிரட்டி உள்ளார். அவரிடம் இருந்து ரூ.1 லட்சம் வாங்கியதோடு, ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட விவரம் வெளியாகி உள்ளது. இன்ஸ்பெக்டர் ஜெயசனில் பணியில் இருந்த போது கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேறு ஒரு போக்சோ வழக்கில் பிடிபட்ட 27 வயதான வாலிபரை வழக்கில் இருந்து விடுவிப்பதாக கூறி ரூ.1 லட்சம் வாங்கியுள்ளார்.பின்னர் தனது குடியிருப்புக்கு கொண்டு சென்று அந்த வாலிபரை மிரட்டி ஓரினச் சேர்க்கையிலும் ஈடுபடுத்தியுள்ளார். பின்னர் அவரை கைது செய்து சிறையிலடைத்தார். இந்த வழக்கில் ஜாமீன் கோரி வாலிபர் மனு தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணைக்கு வந்த போது, தன்னை இன்ஸ்பெக்டர் ஜெயசனல் மிரட்டி ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுத்திய விவரத்தை நீதிபதியிடம் அவர் கூறினார். இதையடுத்து ஜெயசனில் மீது வழக்கு பதிவு செய்ய போலீசுக்கு நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி இன்ஸ்பெக்டர் ஜெயசனல் மீது அயிரூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்….

Related posts

ஒசூரில் தனியார் வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து 14.5 லட்சம் கொள்ளை!

செய்யாறில் இன்று திருமணம் நடக்க இருந்தது காஞ்சிபுரம் சென்ற மணப்பெண் கடத்தலா?

பாமக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு