போக்சோ, பாலியல் வழக்குகளில் கைதான 6 பேர் மீது குண்டாஸ்

தூத்துக்குடி, ஜூலை 29: தூத்துக்குடி மாவட்டத்தில் போக்சோ, பாலியல் வழக்குகளில் கைதான 6 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் கழுகுமலை வள்ளிநாயகபுரத்தை சேர்ந்த பரமசிவன் மகன் மாரிமுத்து (எ) எமிலிகுட்டன்(30), ஆண்டவர் மகன் பாண்டிசெல்வம்(22), லெட்சுமணன் மகன் பால்ராஜ்(எ)விஜி(35), ராமநாதன் மகன் காளிராஜ் (26) ஆகிய 4 பேரை மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். கடந்த 10ம் தேதி குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 25 வயது பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் ஏரல் பெருங்குளம் சன்னதி தெருவை சேர்ந்த அய்யப்பநயினார் மகன் முத்துராம்குமார் (எ) தங்கம்(27), குரும்பூர் அடுத்த புறையூர் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சுபாஷ்(23) ஆகியோரை குரும்பூர் போலீசார் கைது செய்தனர்.

போக்சோ வழக்கில் தொடர்புடைய மாரிமுத்து(எ)எமிலிகுட்டன், பாண்டிசெல்வம், பால்ராஜ்(எ)விஜி, காளிராஜ் மற்றும் பாலியல் வழக்கில் தொடர்புடைய முத்துராம்குமார் (எ) தங்கம், சுபாஷ் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய எஸ்பி பாலாஜிசரவணன் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அவரது உத்தரவின்பேரில் 6 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான ஆணையை சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீசார் பாளை. மத்திய சிறையில் அளித்தனர். இந்தாண்டு இதுவரை போக்சோ வழக்குகளில் 12 பேரும், போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 2 பேரும் என மொத்தம் 95 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு