போக்குவரத்து வழக்குகளில் ஆஜராக 48 வழக்கறிஞர்கள் நியமனம்

சென்னை: தமிழக போக்குவரத்துத் துறை முதன்மை செயலாளர் கே.கோபால் வெளியிட்டுள்ள அரசாணை: போக்குவரத்துக் கழகங்கள் தொடர்பான வழக்குகளில் ஆஜராவதற்காக 48 வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுகின்றனர். அந்த வகையில், மதுரை போக்குவரத்துக் கழகம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜராக 2 வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல், கும்பகோணம் போக்குவரத்துக் கழக (திருச்சி மண்டலம்) வழக்குகளில் ஆஜராக 11 வழக்கறிஞர்கள், மதுரை போக்குவரத்துக் கழக (திண்டுக்கல் மண்டலம்) வழக்குகளில் ஆஜராக 17 வழக்கறிஞர்கள், கோவை போக்குவரத்துக் கழக (ஈரோடு மண்டலம்) 8 வழக்கறிஞர்கள், விழுப்புரம் போக்குவரத்துக் கழக (திருவண்ணாமலை மண்டலம்) வழக்குகளில் ஆஜராக 5 வழக்கறிஞர்கள், மதுரை போக்குவரத்துக் கழக (மதுரை மண்டலம்) வழக்குகளில் ஆஜராக 5 வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்….

Related posts

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய கோரி ரயில்வே தொழிற்சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

திமுக பவள விழாவை முன்னிட்டு கால்பந்தாட்ட போட்டிகள்: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

திருவொற்றியூர் 13வது வார்டில் இ-சேவை மையம் இடமாற்றத்தால் 3 கி.மீ அலையும் பொதுமக்கள்