போக்குவரத்து நெருக்கடியால் நெல்லை தமு சாலையில் பாதசாரிகள் பரிதவிப்பு

நெல்லை: நெல்லை சந்திப்பு தமு சாலையில் பேவர்பிளாக் கல் பதிக்கும் பணி மற்றும் போக்குவரத்து நெருக்கடி காரணமாக பாதசாரிகள் பரிதவித்து வருகின்றனர். நெல்லை மாநகர பகுதியில், பல்வேறு இடங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் நடந்து வருகிறது. மேலும் குடிநீர், பாதாள சாக்கடை திட்டத்திற்கு குழாய் பணியும் நடக்கிறது. இதேபோல் நெல்லை சந்திப்பு தமு சாலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பேவர்பிளாக் கல் பதிக்கும் பணி நடக்கிறது. ஏற்கனவே சந்திப்பு ரயில் நிலையம் பகுதி என்பதாலும், மீனாட்சிபுரம் வழியாக டவுன் செல்லும் வாகனங்கள் தமு சாலையில் அதிகளவு பயணிப்பதாலும் தமு சாலையில் எப்போதும் போக்குவரத்து ெநருக்கடி இருக்கும். தற்போது தமு சாலையில் பேவர்பிளாக் கல் பதிக்கும் பணி நடைபெறுவதால் சாலையின் இரு புறத்திலும் அதற்கான கட்டுமான பொருட்கள் வைக்கப்பட்டு உள்ளன. மேலும் சாலையின் இருபுறத்திலும் வாகனங்களும் நிறுத்தப்பட்டு இருக்கின்றன இதனால் தமு சாலையில் எதிர் எதிரே பயணிக்கும் வாகனங்களால் பாதசாரிகள் நடந்து செல்ல முடியாத நிலை தொடர்கிறது. இதனால் பேவர்பிளாக் கல் பதிக்கும் பணி முடிவடையும் வரையிலாவது அப்பகுதியில் வாகனங்களை நிறுத்தவும், வாகனங்கள் பயணிக்கவும் தடை செய்தால் போக்குவரத்து நெருக்கடி குறைந்து பாதசாரிகள் நிம்மதியாக செல்ல வழிவகை ஏற்படும் என சமூகநல ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்….

Related posts

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகள் யாரும் இதுவரை வருந்தவில்லை: உயர் நீதிமன்றம் கருத்து

இலங்கை தமிழ் மக்களின் உரிமைகளுக்காக வாழ்நாளெல்லாம் குரல் கொடுத்தவர் சம்பந்தன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சிறிய வகை கட்டிடங்களுக்கான பணி நிறைவுச்சான்று பெறுவதில் இருந்து விலக்கு: அரசாணை வெளியீடு