போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பக்கோரி ஆர்ப்பாட்டம்

 

ஊட்டி, பிப்.7: போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களை நிரப்பக்கோரி ஏஐடியுசி சார்பில் ஊட்டியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக துவக்கி பேசி முடிக்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள டிஏவை உடனடியாக வழங்க வேண்டும். போக்குவரத்து கழகங்களின் வரவுக்கும் செலவுக்கும் உள்ள தொகையை அரசு வழங்க வேண்டும்.

ஓட்டுநர், நடத்துநர் மற்றும் தொழிற்நுட்ப பணியாளர்கள் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டி மண்டல ஏஐடியுசி போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பில் ஊட்டி மத்திய பஸ் நிலையம் எதிரே ஆர்ப்பாட்டம் மற்றும் காத்திருப்பு போராட்டம் நேற்று நடந்தது. சங்கத்தின் துணை பொதுச்செயலாளர் நசீர் தலைமை வகித்தார். இதில் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்