போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த நோட்டீஸ்: பிரச்னையை விரைந்து தீர்க்க வலியுறுத்தல்

சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் தங்களது கோரிக்கைகளுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் தமிழக மக்களுக்கு சிறப்பான சேவை அளிந்து வரும் பொதுத்துறை நிறுவனமாகும். பயணிகள் எண்ணிக்கையைக் குறைத்து போக்குவரத்து கழகங்களை அழிக்கும் முயற்சியில் அதிமுக அரசு ஈடுபட்டது. கடந்த 2015ம் ஆண்டு முதல் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு அனிலைப்படி உயர்வை வழங்காமல் கொடுமைகள் செய்தது. போக்குவரத்து கழகங்களைப் பாதுகக்க வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை வழங்க வேண்டும். மற்ற துறை ஊழியர்களைப்போல் போக்குவரத்து கழக ஊழியர்களுக்கும் ஊதிய விகிதம் வழங்கி ஊதியம் வழங்கப்பட வேண்டும். ஓய்வுபெற்ற உடன் ஓய்வுகால பலன்கள் வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர் போராட்டங்களும், வேலை நிறுத்தங்களும் நடைபெற்றது.தமிழக அரசு போக்குவரத்து கழகங்களைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும், வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை வழங்க வேண்டும். தொழிலாளர்கள் பணத்தை வைத்து கழகங்களை நடத்த கூடாது. மற்ற துறை ஊழியர்களைப்போல் பே-மேட்ரிக்ஸ் அடிப்படையில் ஊதிய ஒப்பந்தத்தை இறுதிப்படுத்த வேண்டும். ஓய்வுபெற்ற ஊழியர்களு க்கு அகவிலைப்படி உயர்வு, ஓய்வுகால பலன்கள், மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 19.7. 2022ம் தேதி அனைத்து கழகங்களிலும் வேலை நிறுத்த அறிவிப்பு வழங்குவது என சிஐடியு முடிவு மேற்கொண்டுள்ளது. நீண்ட காலமாக காத்திருந்தும் நியாயங்கள் மறுக்கப்பட்டதாலேயே வேலைநிறுத்த அறிவிப்பை சிஐடியு வழங் கியுள்ளது. ஊழியர்களது கோரிக்கைளில் தீர்வு கண்டு வேலை நிறுத்தத்தை தவிர்க்க வேண்டும் என்பதே இப்போதும் அரசுக்கு எங்கள் வேண்டுகோள், போக்குவரத்து ஊழியர்களின் நியாயமான கோரி க்கை க்கு பொதுமக்கள் பேராதரவு தர வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம். …

Related posts

தண்டையார்பேட்டை மண்டலத்தில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி முகாம்

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் அறிவிப்பு

சென்னை உள்ளிட்ட 4 மண்டலங்களில் மாவட்ட எல்லைக்கு ஏற்ப ரேஷன் கடைகள் மாற்றம்: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிவிப்பு