போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்திய ஆம்னி பேருந்துக்கு அபராதம்

 

அம்பத்தூர்: கோயம்பேடு மார்க்கெட் அருகே இரவு நேரங்களில் ஆம்னி பேருந்துகள் சாலையை ஆக்கிரமித்து வரிசையாக நிறுத்தப்பட்டு வந்தது. இதன்காரணமாக வாகனங்கள் செல்ல முடியாமல் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில், கோயம்பேடு போக்குவரத்து ஆய்வாளர் சுந்தரம் நேற்றுமுன்தினம் இரவு ஆய்வு செய்தார். அப்போது கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டிருந்த ஆம்னி பேருந்துக்கு ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்தார்.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் சுந்தரம் கூறுகையில், கோயம்பேடு சுற்றுவட்டார பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதித்து வருகிறோம். சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதித்து வருகிறோம்.
கோயம்பேடு மார்க்கெட் அருகே ஆம்னி பேருந்துகள் வரிசையாக நிற்பதால் போக்குவரத்து பாதிக்கப்படுகின்றனர். எனவே, இதுபோல் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார்.

 

Related posts

வத்திராயிருப்பு அருகே திராவிட இயக்க வரலாற்று சாதனைகள் கலை நிகழ்ச்சி

ராஜபாளையம் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்

ரூ.2.05 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கல்