போக்குவரத்துக்கு இடையூறாக வாகன நிறுத்தம் துவரங்குறிச்சியில் பொதுமக்கள் பாதிப்பு

 

துவரங்குறிச்சி, ஜூன் 22:திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி பேருந்து நிலையத்தில் நுழைவாயிலின் அருகே தனியார் வாகன ஓட்டிகள் கார், ஆட்டோ, சரக்கு வேன், இரு சக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு சென்று விடுகின்றனர். இதனால் துவரங்குறிச்சி பேருந்து நிலையத்திற்கு உள்ளே வரும் புறநகர் மற்றும் நகர பேருந்துகள் உள்ளே வருவதற்குள் பேருந்து ஓட்டுநர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். வெகுநேரமானாலும் வாகனத்தினை எடுப்பதுமில்லை.

இதனால் பேருந்து நிலையத்திற்கு உள்ளே தனியார் வாகனங்களை நிறுத்த அனுமதிக்க கூடாது என்று பொதுமக்கள் பொன்னம்பட்டி பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இருசக்கர வாகனங்களை பேருந்து திரும்பும் இடங்களில் வாகன ஓட்டிகள் நிறுத்திவிட்டு செல்வதாலும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

Related posts

நெற்பயிர், மா, வாழை மரங்களை துவம்சம் செய்த ஒற்றை யானை வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு

நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருந்து செல்லும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவு

இபிஎப்ஓ பி.ஏ., இஎஸ்ஐசி நர்சிங் அலுவலர் பணியிடங்களுக்கான யுபிஎஸ்சி எழுத்து தேர்வு