பொள்ளாச்சி சந்தையில் ரூ.1.20 கோடிக்கு மாடுகள் விற்பனை-வியாபாரிகள் வருகை குறைவால் விற்பனை மந்தம்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி சந்தைக்கு கேரள வியாபாரிகள் வருகை குறைவால், மாடு விற்பனை மந்தமானதாக வியாபாரிகள் தெரிவித்தனர். பொள்ளாச்சியில் வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் நடைபெறும் மாட்டு சந்தைக்கு வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்தும், மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இதனை, கேரள வியாபாரிகளே அதிகம் வங்கி  செல்கின்றனர். கடந்த வாரத்தில் கர்நாடக, ஆந்திரா மாநிலத்திலிருந்து  மாடுகள் வரத்து இல்லாமல், உள்ளூர் பகுதி மாடுகளே விற்பனைக்காக  கொண்டு வரப்பட்டது. இருப்பினும் மழையால் விற்பனை மந்தமானது.நேற்று நடைபெற்ற சந்தை நாளின்போது, கர்நாடக, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநில  பகுதியிலிருந்து விற்பனைக்காக  மாடுகள் வரத்து ஓரளவு இருந்தாலும்,  தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து மாடுகள் வரத்து  குறைவாக இருந்தது.இருப்பினும், கேரளா வியாபாரிகள் வருகை மிகவும்  குறைவால், மாடு விற்பனை மிகவும் மந்தமானது. கடந்த வாரத்தைவிட  குறைவான விலைக்கு மாடுகள் விற்பனை செய்யப்பட்டது. கடந்த வாரத்தில்  ரூ.1.60 கோடிக்கு வர்த்தகம் இருந்தது. ஆனால் நேற்று, ரூ.1.20 கோடிக்கே  வர்த்தகம் இருந்ததாக, வியாபாரிகள் தெரிவித்தனர்….

Related posts

தெருநாய்கள் கணக்கெடுக்கும் பணிக்கான பயிற்சி முகாமினை தொடங்கி வைத்தார் கூடுதல் தலைமைச் செயலாளர்

தேனியில் மருத்துவமனை கட்டிடம் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு: 2 பேர் படுகாயம்

மாவீரன் அழகுமுத்துக்கோன் திருஉருவச் சிலைக்கு 11ம் தேதி மரியாதை செலுத்துகிறார் எடப்பாடி பழனிச்சாமி