பொருளாதாரத்துக்கான நோபல் 3 பேருக்கு அறிவிப்பு

ஸ்டாக்ஹோம்: பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு 3 நிபுணர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. உலகின் உயரிய விருதான நோபல் பரிசு ஆண்டுதோறும் இலக்கியம், இயற்பியல், மருத்துவம், வேதியியல், அமைதி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் அறிவிக்கப்படும் இந்த விருதை இலக்கியம், இயற்பியல், வேதியியல், மருத்துவ துறை சாதனையாளர்கள் இதுவரை பெற்றுள்ளனர். இந்நிலையில் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த 3 பேருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ‘தொழிலாளர்களின் பொருளாதாரம் குறித்த பங்களிப்புக்காக நிபுணர்கள் டேவிட் கார்டு, ஜோஸ்வா ஆங்கிரிஸ்ட், கியூடோ இம்பென்ஸ்’ ஆகியோருக்கு இப்பரிசு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது….

Related posts

நான் மீண்டும் அமெரிக்க அதிபரானால் உக்ரைன் – ரஷ்யா போரை ஒரேநாளில் நிறுத்தி விடுவேன்: டிரம்ப் சூளுரை

இம்ரான்கானின் மனைவிக்கு முன்ஜாமீன்

நேபாள கம்யூனிஸ்ட் ஆதரவு வாபஸ் நேபாளத்தில் மீண்டும் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி: பிரதமர் பிரசந்தா பதவி விலக மறுப்பு