பொன்னை பகுதிகளில் கனமழை விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கி பயிர்கள் நாசம்-விவசாயிகள் வேதனை

பொன்னை : காட்பாடி தாலுகா, பொன்னை மற்றும் 20க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் நெல், வேர்க்கடலை, கரும்பு உள்ளிட்ட பயிர்களை விவசாயம் செய்து வருகின்றனர்.இந்நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பொன்னை மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் பெய்த பருவமழை காரணமாக அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. ஏரி நீர்வரத்து கால்வாய்கள் தூர்ந்து போனதால் விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.இதற்கிடையில், கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கி பயிர்கள் நாசமடைந்து வருகின்றன. இதனால் விவசாயிகள் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர். பாதிப்படைந்த பயிர்களை அதிகாரிகள் பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏரி நீர்வரத்து கால்வாய்களை தூர்வாரி விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகாதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

Related posts

உதகையில் படகு ஓட்டுனர்கள் திடீர் வேலை நிறுத்தம்: படகு சேவை பாதிப்பு

தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

கோவை வனப்பகுதியில் இருந்து பாக்கு தோட்டத்திற்குள் நுழைந்த காட்டு யானைகளை ட்ரோன் மூலம் கண்காணிக்கும் வனத்துறை!