பொன்னியின் செல்வனுக்கு பிறகு சம்பளத்தை உயர்த்திவிட்டேனா? கார்த்தி பதில்

சென்னை: பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு வெளிவரும் கார்த்தியின் படம் சர்தார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருகிற 21ம் தேதி வெளிவருகிறது. இந்த படத்தை இரும்புத்திரை, ஹீரோ படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கி உள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார். ராசி கன்னா, சன்கி பாண்டே, லைலா, முனீஷ்காந்த் உள்பட பலர் நடித்துள்ளனர். படம் தொடர்பாக கார்த்தி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: ஹாலிவுட் ஜேம்ஸ் பாண்ட் முதல் கமல்ஹாசனின் விக்ரம் வரை ஏராளமான உளவாளிகள் பற்றிய படம் வெளிவந்திருக்கிறது. அந்த வரிசையில் இதுவும் ஒரு உளவாளி பற்றிய கதைதான். ஆனால் உள்ளூர் உளவாளி பற்றியது. சமூக அக்கறை கொண்ட அந்த உளவாளி ஒரு முக்கிமான உளவு வேலைக்கு உலகம் முழுக்க பயணிக்கிற மாதிரியான கதை. அதனால் முந்தைய உளவாளிகள் படத்திலிருந்து இது முற்றிலும் மாறுபட்டு நிற்கும், இதில் நான் 10க்கும் மேற்பட்ட தோற்றங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் அப்பா, மகன் என்கிற இரண்டு கேரக்டர்தான். பொன்னியின் செல்வனுக்கு பிறகு சம்பளத்தை உயர்த்தி விட்டீர்களா என்று கேட்கிறார்கள். படத்துக்கு படம் சம்பளத்தை உயர்த்த நான் தயார். ஆனால் யார் தருவார்கள். உழைப்புக்கேற்ற ஊதியம் ஒழுங்காக வந்தாலே போதும். என்னை பொறுத்தவரை சம்பளத்தை பற்றி பெரியதாக கருதுவதில்லை. மக்களை மகிழ்விக்க வைக்கும் நல்ல படங்களை கொடுக்க வேண்டும். …

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை