பொன்னியானூர் பேருந்து நிறுத்தம் பகுதியில் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களால் விபத்து அபாயம்-அச்சத்துடன் பயணிக்கும் வாகனஓட்டிகள்

க.பரமத்தி : புன்னம் சத்திரம் வேலாயுதம்பாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் பொன்னியானுர் பேருந்து நிறுத்தம் பகுதியில் ஏற்பட்டுள்ள பள்ளங்களால் விபத்து ஏற்படும் அபாய நிலையால் பலரும் அச்சமடைந்துள்ளனர். இனியாவது நெடுஞ்சாலை பள்ளங்கள் சீரமைக்கப்படுமா என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.க.பரமத்தி ஒன்றியம் புன்னம் ஊராட்சி பொன்னியானூர் பேருந்து நிறுத்தம் புன்னம் சத்திரம் வேலாயுதம்பாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இதன் பகுதியில் நெடுஞ்சாலையில் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இரு சக்கர மற்றும் 4 சக்கர வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருவது வாடிக்கையாகி விட்டது.இதன் புன்னம்சத்திரம் வேலூர் பகுதிக்கு தினமும் ஏராளமான இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சென்று திரும்பவும் வருகின்றன. குறிப்பாக இரவு நேரங்களில் விவசாயிகள், விவசாய விளை பொருட்களை இந்த வழியாகத்தான் உள்ளூர் வெளியூர் சந்தைகளுக்கு டூவீலரில் வைத்து கொண்டு விவசாயிகள் சென்று ஊருக்கு திரும்புகின்றனர்.இவ்வாறு மக்கள் ஏராளமானோர் பொதுமக்கள் பயன்படுத்தும் இந்த நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளதால் இந்த வழியாக வாகனங்களில் செல்வோர் அடிக்கடி விபத்து ஏற்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது எனவே இதனை சீரமைக்க நடவடிக்கை தேவை என பொதுமக்கள் மற்றும் வாகனஒட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்