பொன்னானி ஆற்றின் அருகே குப்பை கொட்டுவதால் பாதிப்பு ஈரோட்டில் இருந்து ஊட்டிக்கு வந்தது

பந்தலூர், ஏப்.4: பந்தலூர் அருகே பொன்னானி பகுதியில் பொன்னானி ஆற்றின் அருகே குப்பைகள் கொட்டுவதால் சுகாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே அத்திமாநகர் பகுதியில் உற்பத்தியாகி பொன்னானி பகுதியில் ஆறாக உருவெடுத்து அம்மங்காவு, பென்னை வழியாக கேரளா செல்லும் பொன்னானி ஆற்றின் பல்வேறு இடங்களில் ஆற்று ஓரங்களில் குப்பைகளை கொட்டுவதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றது. குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் நீரில் கலந்து தண்ணீர் மாசுபட்டு பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் சிரமப்படுகின்றனர். அதனால் பொது சுகாதார பாதிப்புகள் ஏற்படுகின்றது. எனவே சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து பொன்னானி ஆற்றின் அருகே குப்பைகள் கொட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு