பொன்னமராவதி ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோயில் திருவிழா

பொன்னமராவதி,ஏப்.12: பொன்னமராவதி ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோயிலில் கரகமஹோத்சவ விழா 7 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெற்றது. விழாவையொட்டி கடந்த 4ம்தேதி காப்புக்கட்டப்பட்டு தினமும் மண்டகப்படிதாரர்கள் சார்பில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து பொன்னமராவதி சோழீஸ்வரர் கோயிலிருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோயில் சென்று அம்மனுக்கு சாத்தி வழிபட்டனர். அதையடுத்து கணபதி ஹோமம் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. மாலை மலையாண்டிகோயிலிருந்து பக்தர்கள் கரகம் எடுத்து உடலில் கத்திபோட்டு ஊர்வலமாக வந்து அம்மன் கோயிலில் வழிபட்டனர். கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற விழா இப்போது ஏழு ஆண்டுக்கு பின் நேற்று இந்த விழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. விழாவிற்கான ஏற்பாடுகளை தேவாங்கர் மகாஜன சபைத்தலைவர் நடராஜன், செயலர் சண்முகசுந்தரம், பொருளர் காமராஜ் ஆகியோர் செய்திருந்தனர். தொடர்ந்து இன்று பொங்கலிடுதல் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற உள்ளது.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு