பொன்னமராவதியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு டயப்பர், நாப்கின் வழங்கல்

 

பொன்னமராவதி,மார்ச் 13: பொன்னமராவதியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு டயப்பர் மற்றும் நாப்கின் வழங்கும் முகாம் நடந்தது. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் வழிகாட்டுதலுக்கு இணங்க மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான டயப்பர் மற்றும் நாப்கின் வழங்கும் முகாம் பொன்னமராவதி வட்டார வளையத்தில் நடைபெற்றது. இந்த முகாமினை வட்டார கல்வி அலுவலர்கள் ராமதிலகம் மற்றும் இலாகி, ஜான் ஆகியோர் தொடங்கி வைத்தனர். வட்டார வளமைய மேற்பார்வையாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தார் . வீடு சார்ந்த பயிற்சி மாற்றுத்திறன் மாணவர்களுக்கு இரண்டாம் தவணையாக டையப்பர் மற்றும் நாப்கின் பொருட்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர் பயிற்றுனர் கவிதா செய்திருந்தார். பெற்றோர்கள், வீடு சார்ந்த பயிற்சி மாற்றுத்திறனாளி மாணவர்கள், சிறப்பு பயிற்றுநர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை