பொன்னமராவதியில் கிராம ஊழியர் சங்க பொதுக்குழு கூட்டம்

பொன்னமராவதி: பொன்னமராவதியில் கிராம ஊழியர் சங்க வட்டக் பொதுக்குழுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு வட்டத்தலைவர்அய்யப்பன் தலைமைவகித்தார் மாவட்ட இணைச்செயலாளர்சின்னத்துரை,மாவட்ட துணைத்தலைவர் பச்சையம்மாள், மாநில செயற்குழுஉறுப்பினர்பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் மாவட்டத்தலைவர்குமார், மாவட்டச்செயலாளர் செல்லையா, ஓய்வு பெற்ற கிராம ஊழியர் சங்க மாவட்டத்தலைவர் சுப்பையா ஆகியோர் பேசினர். கூட்டத்தில் வட்டச்சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவது, மாவட்ட சங்க அறிவுறுத்தலின் படி மாதந்தோறும் கூட்டம் நடத்துவது, எதிர்காலத்தில் மாநில சங்கம் எடுக்கும் அனைத்து நடவடிக்கைக்கும் வட்டச்சங்கம் முழு ஆதரவு அளிப்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.முடிவில் செயலாளர் விஜயா நன்றி கூறினார் இதில் யாசர், காமராஜ், கமலம், கோபால், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு